சனி, 9 நவம்பர், 2013



வெற்றி மகுடம் (கவிதை :கவியாழினி)

பிறப்பு முதல் இறப்புவரை இங்கு
அனைவரின் ஆவல் வெற்றியே

எளிதில் கிடைத்த வெற்றி வெறும்
எள்ளளவில் மகிழ்ச்சி தரும்

குறுக்குவழியில் பெற்ற வெற்றி குறுகிய
நேரத்தில் மறைந்து போகும்

போராடாமல் கிடைத்த வெற்றி மண்ணில்
வேரோடு மறைந்து போகும்

கடின உழைப்போடு விடாமுயற்சி செய்தவரை
வெற்றி விட்டுவிட்டு போனதில்லை

இறுதிவரை போரடுபவனுக்கு என்றும்
வெற்றி இல்லை என்று சொன்னதில்லை

துயரங்களில் துவளாமல் நடைபோட்டவனை விட்டு
வெற்றி நகர்ந்து போனதில்லை

மனமும் உடலும் ஒருநிலைப்படுத்தி மன்றம்ஏற
வந்தவனை வெற்றிமறந்து போனதில்லை

உண்மையோடு உயர உழைத்தவனை வெற்றி
உதறி உதாசித்து சென்றதில்லை

உறுதியோடு உன்னத உணர்வோடு
ஓடிவந்தவனை விட்டு வெற்றி ஓடிப்போனதில்லை

தோல்விக்கு மிரளாமல் மீண்டெழுந்து வந்தவனை
வெற்றி தொலைத்துவிட்டு போனதில்லை

தன்னபிக்கையோடு தங்கமாக மிளிர வந்தவனை
வெற்றிமகுடம் சூட்டாது மடிந்ததில்லை.

...கவியாழினி ...