புதன், 31 ஜூலை, 2013

கொஞ்சும் தமிழ் - கொஞ்சம் கவி

மின்னல்
*************
மழை போர்த்திய
வெண் திரையில்
பூமியின் அழகை
படம் பிடித்துச் செல்கிறது
மின்னல்...


அடகு
**************
அடகு வைத்தேன்
மீட்க முடியவில்லை
அவளிடம் என் மனசு


மயிலிறகு
****************
புத்தகத்தினுள்
முனகல்
பிரசவ வேதனையில்
மயிலிறகு!

ஞாயிறு, 28 ஜூலை, 2013

வாலிப கவிஞனுக்கு அஞ்சலி

ஸ்ரீரங்கத்து மைந்தன் -ஏனோ
மரித்து போனான்
விதி செய்த சதி
சதியில் வீழந்த ஒர் கவி

க்வியரசன் கண்ணதாசனுக்கு பிறகு
நீதானே - எங்கள்
கண் கொள்ளா கவிநேசன்.

மறைந்து போனாயோ? - தமிழை
மறந்து போனாயோ ?
இதயம் ஒர் கணம்
மரத்துதான் போனது எனக்கு

எங்கள் இதயம் தொட்ட நாயகன்
உனக்கு நுரையீரல் தொற்று நோய்
ஏன் என நான் அறிவேன் -உன்னுள்
தமிழ் சுவாசம் பொங்கியதால் தானே ?!!

உன்
சிகப்பு முக புத்தக்கத்தில்
வெள்ளை முடி ஒவ்வொன்றும்
கவிதை வரிகள் என்பதாலோ
அதை மட்டும் மழித்து
நீ மட்டும் மரணித்து போனாயோ ??

வாலிப கவிஞனே
வாலியே !! -உன்
வரிகளை சுவைத்த எனக்கு- இந்த
வலிகளையும் சுமக்க பழகிக்கொள்கிறேன் .

உன் ஆதமா சாந்தியடையட்டும்.
உன் கவிகள் சரித்தரம் படைக்கட்டும் ...

நோய்

கற்பனை கிருமியால்
தாக்கப்பட்டவன் நான்

தொற்று நோயாக
வெள்ளை தாளில்
வார்த்தைகள் கொஞ்சம்

தமிழிடம் கேட்டேன்
இந்நோயின் பெயர் என்வென்று

பதில் சொன்னது
”கவிதை” என்று

ஏக்கங்கள்




அகம் மலர வேண்டும்
ஆதரவு கரம் வேண்டும்
இணைப்பு சக்தி உருவாக வேண்டும்
ஈழத்தில் தமிழன் ஆள வேண்டும்
உற்ற காதலி வேண்டும்
ஊர் மெச்ச சாதிக்க வேண்டும்
எனை தாங்க நண்பர்கள் வேண்டும்
ஏக்கங்கள் ஒழிய வேண்டும்
ஐயமின்றி ஜாதிகள் ஒழிய வேண்டும்
ஒருமித்த குரலால் காவேரி வர வேண்டும்
ஓங்காரமாய் தமிழ் பேச வேண்டும்
ஒளவை கிழவி நாணயத்தில் பதியவேண்டும்
ஃ  க்கு வார்தைகள் சேர்க்கத்தெரிய வேண்டும்

நீ வருவாய் என....

வா வா
வானவில்லாய் வா
என் பிரம்மசாரிய  வேடம்
உன்னுடன் நிறம் மாற....

வா வா
அலை அலையாய் வா
என் குழந்தை மனம்
உன்னுடன் விளையாட ....

வா வா
பூவாய் பூத்திட வா
என் பாலைவன தோட்டத்தில்
உன்னுடன் மகிழ்ந்தாட...

வா வா
எதிர்கால மனைவியே வா
என் எதிர்காலத்தை
உன்னுள் அர்ப்பணிக்க

என் இளமை பருவம்
இளந்நரையில் வீழம்
முன்பே வா -- உனை
முத்திமிட என்
உதடுகள்
உறவு சாயத்தோடு
காத்திருக்கிறது

வா...  வா...

புதன், 10 ஜூலை, 2013

அவள்

அவள் பலருக்கும் சொந்தம்
நானும் அவளுக்கு பந்தம்
அவளை சீண்டுவதே என் இன்பம்

அவள்  பலருக்கும் உரிமையானவள்
நானும் அவளுக்கு உண்மையானவன்
அவளை சிங்காரிப்பதே என் ஆளுமை


அவள் வல்லினப்பெண் என்றாலும்
ஆணின் வலிமைக் கொண்டவள்
அவளின் இடையினத்தை படித்தே
ஆயிரம் காவியங்கள் படைக்கலாம்
அவளின் மெல்லினத்தை பார்த்தே
ஆயிரம் புதுகவிகள் பிறக்கலாம்

என் பாலப்பருவத்தில்
அவளை பருகினேன்
என் காதற்பருவத்தில்
அவளை காதலித்தேன்
என் மூப்புப்ருவத்திலும்
அவளை முகருவேன்.

அவளை எழதாத எழத்தாணில்லை
அவளை பாடாத சங்கீதமில்லை
அவளில்லாமல் நானில்லை

அவளே ....
என் தாய்மொழியாம்
செம்மொழியான
என “ தமிழ்







செவ்வாய், 9 ஜூலை, 2013

கவி சில்மிஷம்


kavithaayini’s Kavithai

வெள்ளி, 5 ஜூலை, 2013

நட்பு(பூ)

இந்தப்பூ
காதல் மண்ணில்
பூத்தால் தான் வாடும்
நட்பு மண்ணில் அல்ல

சேதத்தை தருவது காதல்
சிநேகத்தை தருவது நட்பு.

சந்தேக சூழலில்
வளர்வது காதல்
சந்தோஷ சூழலில்
வாழ்வது நட்பு

சிலர்க்கு
காதலென்பது
மோகம் உள்ளவரை
பலரின் பலர்க்கு
நட்பென்பது
உயிர் போகும் வரை

நட்பால் மலர்ந்த
காதல் வாழலாம்
காதலுக்காக முளைத்த
நட்பு வீழவே வேண்டும்.

காதல் ....
எமனோடு மரணத்தை அழைக்கும்
நட்பு
எவனோடும் மரணத்தை வெல்லும்.



ரா.சந்தோஷ் குமார்

சாதித்து என்னப்பயன் ???/

மஞ்சள் வெயில் –என்
நெஞ்சை குதூகலப்படுத்திய
மாலை வேளை .

எந்த கிளியிடமோ பச்சையை
கடன் வாங்கிய வயல்வெளி
என் இருபுறமும் ...

கற்பனை தோள் சாய்ந்து
கவியை எண்ணி நடை
அளந்து கொண்டிருந்த போது.....

என் தொலைதூரத்தில் ஒர்
கலவரத்தீ – காரணம்
காதல் பற்றி கொண்டதால்...

செய்தி என்னவென்றால் ..
இச்சாதி ஆணுக்கும்
அச்சாதி பெண்ணுக்கும்
காதலாம் !!?

கவிஞன் என்று தலை நிமிர்ந்த எனக்கு
மனிதன் என தலை குனிவைவிட
வேறுயென்ன இருக்கு....

சாதிகளை ஒழிக்காமல் நாம்

சாதித்து என்னப்பயன் ???/ 

செவ்வாய், 2 ஜூலை, 2013

நிலா

கதிரவ கணவனை
இழந்த வாண மங்கை
இட்ட பொட்டு !!

அட்டா !!!
இயற்கையிலும்
விதவை பொட்டு
வைக்கிறதே !!!

ஒர் பயணம் இரு தண்டவாளம்

வாழ்க்கையும் ஒர்
இரயில் பயணம் போலத்தான்

பிறப்பு நிலையித்திலிருந்து
மரண நிலையத்தை நோக்கி....

காதல் கல்யாணம்
அனைவருக்கும் வாய்ப்பதில்லை
ஜன்னல் ஒர இருக்கையப்போல..

முன்பதிவு செய்த பயணம்
நிச்சியக்கப்பட்ட திருமணம் போல
சுகமானது.
முன்பதிவில்லா பயணம்
காதல் திருமணம் போல
அவஸ்தையானது.

பயணச்சீட்டில்லா பயணமும்
ஒரு தலை காதலும்
ஆபத்தானவை .
பரிசோதிக்கப்பட வேண்டியவை.

{ என் 22 வது வயதில் எழதிய கவிதை இது}

பதிவு

என்னை போல்
வயது பதிவு செய்தவர்கள்
வாழ்க்கை வண்டியில்
பயணித்திருக்க
நான் மட்டும்
இன்னும் இன்னும்
காத்திருப்போர் பட்டியலில் ........ .

_______________


{வேலையில்லாத போது பொழது போக எழுதியது இது}

தமிழ் தமிழா

தமிழ்க்கு அமுதமென்று பெயர்

அமுதத்தில் வேதியல் மானிடர்களே -அதில்
ஆங்கில அமிலத்தையல்லவா
கரைத்து சோதனையீடுகிறிர்கள் !!

அமில நெடியில் பாதிப்பது
நம் தமிழ் சுவாசம் அல்லவா ??

உணர்வுகள்

உயிர் தோழியே !!
.....

சற்றே பொறு !...  தோழியே !!
மருவி மாற்றி நினைத்திடாதே.

நீ என்
காலத்திற்கும் தோழி - என்
காதலுக்கு அல்ல.

பருவ வயதின்
சிணுங்கல் தான் இந்த
காதல்- அது
உன்னோடு எனை
சீண்டுகிறது.

வேண்டாம் தோழியே !
நம் சிநேகம்
காதல் நேசத்தால்
சேதாரப்பட விரும்பவில்லை
என் மனம் !

காதல் என்றால் ....
    நான் உனக்கு
    காவிரி நதி
    நீ எனக்கு
    தமிழ் தேசம்.

பேச்சு வார்த்தையில் வாதிட்டும்
பயனில்லை.
நட்பின் உணர்வு அணைகள்
எனை தடுக்கிறது....

என் நிபந்தனைக்கு
நீ நிர்பணிந்துகொள் !
நண்பனாய் ஏற்றுக்கொள்!!

ஒரு தலைக்காதல்

நண்பணே!!

உனக்குள் ஒரு தலைக்காதலால்
தவிக்கும் இருக்கொள்ளி எரும்பாய் நீ ...

வேண்டாம் வேண்டாம்  தோழா
முளையிலே கிள்ளி விடு
மூளையை நிர்பந்திக்கும் இவ்வுணர்வை

அவளின் மெளனப்பார்வைக்கூட
உனையை கண்காணிப்பதாய் உருகுவாய்
புல் நுனியில் பூத்த பனித்துளி
இந்த காதல்..

அவளின் புன்னகை கூட
உனக்காக பூத்ததாய் உணர்வாய்
கனவிலும் ரசித்து உளறுவாய் .

அவளின் கை அசைவுகள்
உன் காதலுக்கு சம்மதமென எண்ணுவாய்...

எண்ணி ..... எண்ணி ....
உன் புத்தியை விதியிடம் பலியிடுவாய் .

அவளுக்கு பிடித்தவைகள்
அனைத்தும் உன் படைப்புகளாக
தத்து எடுப்பாய் -பின்பு
பித்து கொள்வாய்.

அவளிடம்  எதிர்பாரா குணங்கள்
உன்னுள் குடைந்தால்
தாறுமாறாய் உளறுவாய் - பின்பு
தடுமாறி அலைவாய்

அவளின் கொள்ளி கண்கள்
உனை எள்ளி நகையாடும்

அவளின் அரளி இதழ் -உன்னுள்
உணர்வு புரளி எழப்பும்.

மூளைகள் சிந்திக்காது
அறிவு மங்கிடும்
லட்சியங்கள் விரிசலிடும்

வேண்டாம் வேண்டாம் தோழா !
முளையிலே கிள்ளி விடு
மூளையை நிர்பந்திக்கும் இவ்வுணர்வை. .

கவிப்பெண்

என் விரல் வலையில்
அந்த பேனா களி... 
அதன் “கற்பு” மை யை
கற்பழித்தேன் -என் 
கற்பனை ஆண்மையால்... 

கற்பிழந்தவள் கவிதையானாள்
நான் கவிஞன் ஆனேன்.