செவ்வாய், 18 மார்ச், 2014

~~~அலைபேசியில் சீரழியும் இளம் சிறார்கள்~~~



நன்றி : திரு ஹாசிப்கான்(ஒவியம்)
-------------------ஆனந்த விகடன்




அரும்புகளின் கையில்
அலைபேசி எந்திரம்.
அலைபேசியால் தினம்
அலைப்பாய்கிறது மனம்.

விலையில்லா நாட்டின் மானம்
விலைப்போகிறது அவமானம்.!

அலைப்பேசி விற்பனை மையங்களில்
அலைமோதுகிறது மாணவ செல்வங்கள்.!
அற்பகாசுக்கு பதிவேற்றப்படுகிறது ஆபாசங்கள் !

புற்றீசல்களாய் நீலப்படங்கள்
கிளுகிளுப்பாய் நிழற்படங்கள்-அத்தனையும்
பாலுணர்வுக்கு முதலீடுகள்.

உடலுறவு காட்சிகள் யாவும்
அலைபேசியில் உலாவும் கேளிக்கை
பள்ளியறை காட்சி நினைவுகளால்
பாடசாலைகளில் முதலிரவு ஒத்திகை.

இளம் சிறார்களின் பார்வைகளில்
இழையோடுகிறது காமக்கோணம்.
இளங்கன்றுகளின் மூளைகளில்
உள்நுழைகிறது காமசூத்திரம்.

விடலைகளின் மோகம்
முலைகளை படமாக்குகிறது.

பிறப்புறுப்பினை படமெடுத்து-
இணையதள வீதியில்
அம்பலப்படுத்தி ரசிக்கிறது.

உடன்படிக்கும் தோழியர்களுடன்
உடன் படுக்க வேண்டுகிறது
உடன்படவில்லை என்றால்
வன்கொடுமையை தூண்டுகிறது

அய்யகோ....!
நாளைய மன்னர்களாம் இவர்கள்-
இன்றைய காமக்காட்டேரி கொடூரர்கள் !

ஏய் ........!
குற்றவாளிகளை உருவாக்கும் பெற்றோர்களே!
குற்றம்செய்து விட்டீர்களே....! நற்பழக்கதில்
வளர வேண்டிய செல்லங்களுக்கு
செல்பேசியை கையில் கொடுத்தீர்களே..!

செல்பேசியால் செல்லப்பிள்ளைகள்
செல்லரித்த பிஞ்சுகளாய் அழுகுகிறதே..!
கொஞ்சிக்கேட்டால் நஞ்சுகளை கொடுப்பீரோ?
மிஞ்சிடும் பாலுணர்விற்கு காரணமாவீரோ..?

எழுதுகோல் ஏந்தும் பிள்ளைகளுக்கு
கொடுங்கோல் செல்பேசி எதற்கு?-கல்வி
மதிப்பெண்களையும் தாண்டிய வாழ்க்கை
மதிப்பீடு நடத்தைகள் வேண்டாமோ ?

வன்கொடுமைக்கான முதல் குற்றவாளிகளே..!
கலாச்சாரத்தை சீரழிக்கும் காரணிகளே..!
பணதிமிர் பிடித்த பெற்றோர்களே..!-பிள்ளைகளை
வெறும் காமத்திற்குதான் பெற்று விட்டீர்களோ ?
உங்கள் பேர் சொல்ல திரிகிறதோ வாரிசுகள் ?


இனியேனும் திருந்திட பாருங்கள்!
இல்லையேல்...
புதைகுழியில் வீழ்ந்து செத்துமடியுங்கள்..!



................................................இரா.சந்தோஷ் குமார்.

இந்த கவிதை இல்லையென்றால் ....




இந்த கவிதை
என்று ஒன்று
இல்லாவிட்டால்
என்னவாகியிருப்பேன்
நான் ?

இருபத்தியொன்றாம் வயதில்
எனக்கான முதல் மரணம்
நிகழ்ந்திருக்கும்...!

இருபத்தியெட்டாவது வயதில்
எனக்கான இரண்டாம் மரணம்
நிகழ்ந்திருக்கும்..!

முப்பத்துமூன்றாவது வயதில்
மூன்றாவது மரணத்தில்
ஜென்ம விமோசனம்
இன்றி அற்ப ஆவியாகிருப்பேன்.

மூன்று முறையும்
கவிதை படித்து
மனதை மாற்றி
தைரியத்தை கொண்டு
உயிரை காப்பாற்றிக்கொண்டேன்

ரசிகனை யாரும்
ரசிப்பதில்லையே...! -ஆனால்
நான் ரசிகன்
எனக்கு நானே ரசித்தேன்.
எனக்குள்ளிருக்கும்
மாபெரும் இரு
மனநல மருத்துவர்களை
மனமுருகி ரசித்தேன்.


ஒருவர் கருப்பு நிறத்தவர்
மற்றொருவர் கருப்பு அணிந்தவர்

பதின்ம வயதில்
வைரமுத்துவை காதலித்தேன்.
அவன் அழகைவிட
நாவின் தாளத்தில்
தமிழ் நடனமாடியதை
மனதில் படம்பிடித்தேன்...!

வெறும் ரசிகன்
வெறி ஏறிய ரசிகனாக
கல்லூரி காலத்தில்
கருப்பு கவிஞனின் மீது
மோகம் ஏறிக்கொண்டேன்..!

அப்படியே....!
அவன் மூளைக்குள்
குடியேறி தமிழை
குடித்துவிட துடித்தேன்.

வெள்ளை ஜிப்பாவுக்குள்
நூலாக நுழைந்து -அவன்
நூல்களை நுகர தவித்தேன்.


இவன் என்
ஆசான் ஆனான்
ஆனால் இவனுக்கு
ஆசானாக இருப்பது
யாரு?
புலன் விசாரணையில்
புலப்பட்டது..


கருப்பு கண்ணாடி
வழி பார்வையாலே
மொத்த தமிழையும்
தலைக்கு ஏற்றி
தலைமுடியை இழந்த
முத்தமிழ் அறிஞர்
கலைஞர் தான்
என் ஆசானின்
ஆசான் அறிந்தேன்.

இரு பொண்டாட்டிகாரனின்
திருட்டு புத்தி வந்தது
எனக்கு.........!
நல்ல காதல்
கலைஞர் மீதும்.
கள்ள காதல்
கவிப்பேரரசு மீதும்.

காலப்போக்கில்
அரசியல் சதுரங்கத்தில்
நெஞ்சுக்கு நீதி
வழங்கிய கலைஞரை
நெருஞ்சிமுள் குத்திய
வலியோடு காதலிக்கிறேன்

இன்னும் கூட
இப்போதும் கூட
இருவரையும்
ஒரு தலை காதலாய்...!


இந்த கவிதை
என்று ஒன்று
இல்லாவிட்டால்
என்னவாகியிருப்பேன்
நான்............?


இந்த
முப்பத்தைந்தாவது வயதில்
எனக்கான நான்காவது மரணம்
நிகழந்துகொண்டிருக்கும்.

---------------------------------------------------------------------------- --இரா.சந்தோஷ் குமார்.

கிரகம் எழுதுகிறேன்




எதையோ தேடுகிறது
எந்தன் மனம்.
எந்த உந்துதலோ
ஆழ்மனதின்
ஆழத்திலிருந்து
தூண்டுகிறது..விட்டால்
துள்ளுகிறது.

எதை நான்
சாதிக்க வேண்டும்.
எதை நான்
வெல்ல வேண்டும்.
எதையுமே சொல்லாமல்
எதையோ தேடச்சொல்லி
எதற்கோ உந்துகிறது
எந்தன் கிறுக்குமனம்..!

வேரோடு ஆலமரத்தை
சுண்டுவிரலால் சுமக்கமுடியுமோ?
வானவில்லோடு வானத்தை
நுனிபற்களால் பறிக்கமுடியுமோ ?

முடியும் , தேடு
என்று உந்துகிறது
என் அற்புதமனம்!

எப்படி முடியும்?
கேட்பது என் பகுத்தறிவு...!
ஏன் முடியாது ?
கேட்டது என் ஆழ்மனம்...!

”எழுதுகோல் எடு....!
விரலோடு தைத்துவிடு...!
இப்பொழுது...
ஆலமரத்தின் விதைக்குள்
ஊடுருவி ஒளிந்துக்கொள்..!
வானவில்லின் வாசலில்
எழுந்து காட்சியாகு..!
சென்ற விதையிலிருந்து
எழுந்து வந்த வானம்வரை
அனுபவித்து எழுது...!”
புதுமை பித்தமனம்
புதுசா உளறியது.

இது என்ன
மாயா ஜாலமா??
முரண்பட்டு
தலையில் அடித்துக்கொண்டது
என் பகுத்தறிவு...!

பதில் சொன்னது
என் அதிசயமனம்...!

இதுதான்
மாய உலகம்..!
இதுதான்
கற்பனை உலகம்..!
இதுதான்
சிந்தனை எழுச்சி..!
இதில் எழுதுடா
கவிதை...!
நீ தான் டா
கவிஞன்...!
உனக்கு நீதான்
ரசிகன்...!

இந்த உலகை
மறந்து எழுது..!
இந்த உலகத்தையும்
மறக்காமல் எழுது...!
..........
என் நாடி நரம்புகள்
துடிப்புடன்
புத்துணர்ச்சி பெற..
புதிய மின்னல்
மூளையில் சொருகி
நிற்கிறது..!

எழுதி கொண்டிருக்கிறேன்...!
என் கற்பனையில்
கருவாக்கி உருவாக்கி
செதுக்கிகொண்டிருக்கிறேன்.
இதுவரை யாரும்
சிந்திக்காத
இதுவரை யாருக்கும்
புலப்படாத
புதிய கிரகம் ஒன்று.
எனக்கான மாற்று கிரகம் என்று
எழுதிக்கொண்டிக்கிறேன்.



---------------------------------- இரா.சந்தோஷ் குமார்

பிணவாடை



பூனைகள் பிரச்சாரம்
சோதனை கூடத்து எலிகளே
அம்மணமாக நிற்காதீர்

ஊர்வலம் வருது
பிச்சைகாரர்களின் பணப்பெட்டியில்
பாரததாயின் பிணவாடை..!

எவனும் கற்பழிக்கட்டும்
நாட்டுமக்களின் இலவச ஆசையில்
ஜனநாயக மங்கை !


முதலமைச்சர் சந்தோஷ்



எழுதுகோலின் மை தெளித்து
ஆவேச நாயகன் நான்
அரசியல் நாய்களை தாக்கினேன் -அதன்
வாலை வெட்டினார்கள் வாக்காளர்கள்.

எழுத்தாளன் என் எண்ணத்திற்கு
ஏராளமான வரவேற்பு மாலைகள்
”எழுதியது போதும் எழுந்து வா! ”
எதிர்பார்த்த மக்களை ஏமாற்றவில்லை.

ஏப்ரல் முதல் நாளில் - பதவி
மேடை ஏறினேன், உறுதிமொழி எடுத்தேன்
”முதலமைச்சர் சந்தோஷ் வாழ்க”
வேஷமில்லாத வாசகர்களின் கோஷங்கள்.

”முதல்வன் “ திரைப்படம் உசுப்பேற்றியது- என்
பின் தொடரும் பாதுகாப்பு வாகனங்கள் -இனி
பெண்மணிகளை தொடரும் கயவர்களை துரத்தும்.

மதுபான கடைகளில் மது விற்பனைக்கல்ல -அங்கு
இளநீரும், நொங்கும் மானிய விலைக்கு.
இலவச பொருட்கள் ஏதும் இல்லை
உழைத்து வாழ்பவர்களுக்கு சலுகை உண்டு.

கல்வி கற்க கட்டணம் ஏதும் இல்லை
பாடதிட்டத்தில் பாலியியல் கல்வி உண்டு.
மருத்துவமனைகளை அரசு கட்டுப்படுத்தும்
அர்பணிப்புள்ள மருத்துவரை அரசு தத்தெடுக்கும்.

வன்கொடுமை செயலில் ஈடுப்பட்டால்
உடனடியாக பிறப்புறுப்பு துண்டிப்பு..
எச்சில் துப்பினாலும் குப்பை போட்டாலும்
துப்புரவு வேலையோடு அபாரதமும் உண்டு.

விவசாய மேலாண்மை உருவாக்கப்படும்
விவசாயம் அறிந்தவர்களுக்கு அரசு வேலை.
திருநங்கைகள் ஆண்பால் என்று அறிவிக்கப்படும்.
பாலியியல் தொழில் முற்றிலும் ஒழிக்கப்படும்.

........................................
.........................................
”சார் போஸ்ட்......! ”

தபால்காரனின் குரல்
செவியில் கேட்க கண் விழித்தேன்
கனவு கலைந்து எழுந்தேன்
வார இதழ் அனுப்பிய கடிதம் .

கொடுத்தான், படித்தேன்.


--”உங்கள் படைப்பு ஏற்றுக்கொள்ள இயலாது
--அரசியல் அநாகரீகம் நிறைந்துள்ளது ”


பத்திரிக்கை ஜால்ராக்கள்- அரசியல்
பத்தினியை நாசப்படுத்தும் வல்லூறுகள்....!
ஜனநாயகத்தின் வேர்களை
செல்லரிக்கும் ஊடக கிருமிகள்

கனவு நனவாக வேண்டும் -முதலில்
குள்ளநரி கூட்டங்களை விரட்ட வேண்டும்.
இது
நாற்காலிக்கான கனவு அல்ல
நாற்றமெடுக்கும் அரசியலை
நறுமணப்படுத்தும் கனவு.


உங்களில் யார் அடுத்த முதல்வர்...?
முதலில் உங்களில் யார் நல்லவர் ?
விடை சொல்லுங்கள்
புது விடியல் காண்போம்.


----------------------------------------------------------------------------
--இரா.சந்தோஷ் குமார்