வெள்ளி, 10 அக்டோபர், 2014

விழியதிகாரம் - 4



விழியதிகாரியை வர்ணிக்கும் முன்...!
------------------------------------------

விழி ஈர்ப்பில்
மையல்கொண்ட
இந்த நாயகனின்
புயல் குணங்கொண்ட
பேராசைகள் யாவும்
அவள் விழியை மீறி
உடல் அங்கங்களில்
தடையில்லாமலே பயணிக்கும்

பயணித்தால் தான்
அது இயல்பு
உலக வியாக்கியனங்களுக்கு
பணிந்தால் அடங்கினால்
அது மனித வாழ்வில்
போலித்தனமான கணக்கு..!

இங்கே...இனிமேல்
என் விழியதிகார கவியின்
வார்த்தை பஞ்சங்களுக்கு
வைரமுத்துவையும் வாலியையும்
திருடப்போகிறேன்.
காமத்தை சொல்ல
அவர்களுக்கு உதவிப்புரிந்தது
கலிங்கத்துப்பரணி..!
எனக்கு உதவிப்புரிவது
என் கன்னியின் மேனி..!


கம்பனையும் நான்
வம்புக்கு இழுப்பேன்
பாரதியையும் நான்
கொஞ்ச்ம் சீண்டுவேன்.
ஆனாலும்
இவர்களை
மிஞ்சிட மிரட்டிட
என் விழியதிகார நாயகியை
நான் வர்ணித்திட வேண்டும்.


இதோ..!
அவளை வர்ணிக்க
காமப் பேனாவில்
காதல் மை ஊற்றிவிட்டேன்..!
அவள் மீதான மோகத்தில்
என் சிந்தனையை
முத்தமிடுகிறது என் கற்பனைகள்..!


(விழியதிகாரம் - தொடரும்)


-இரா.சந்தோஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக