சனி, 19 ஜூலை, 2014

இரா-வின் நாளைய விடியல்

சொல்லில் உன்னைஅடிக்கவா? - கவிதை
சொல்லி உன்னை அணைக்கவா?
வில்லால் உனை கொன்றிடவா?- வான
வில்லாய் உனை வென்றிடவா?-கவிதை
விரலால் உனக்கு எழுதிடவா? -எச்சரிக்கை
விரலை உனக்கு காட்டிடவா?

✿ ✿

சின்ன சின்ன மழைத்தூறல்களில்
சிறிய சிறிய மழலைவாசமிருக்கும்.
என்னை என்னை நீ தெரிந்திடும்போது
உன்னில் உன்னில் அன்பு தெளிவுப்பிறக்கும்.

✿ ✿

பெரியோர் சிறியோரானால்
சிறியோர் பெரியோர் ஆகிடுவார்
சிறியோர் பெரியதவறிழைத்தால்
பெரியோர் சிறுமனதிலாவது
பெரியமன்னிப்பு வழங்கிடலாகதோ??

✿ ✿

இன்றைய அந்தியில்
செத்துவிடும் சூரியனை
ஒரேயொரு கவியெழுதி
உதயசூரியனாய் என்னால்
தட்டியெழுப்ப முடியும்.
அக்கவியின் தலைப்பு
”நாளைய விடியல்” என்றிருக்கும்

✿ ✿

சீர்கேடுகளை சீர்ப்படுத்த
”இரா ”பொழுதில் சிந்தனை
உலாவ நான் ஆரம்பித்தால்
நிலாவும் என் கைப்பிடிக்கும்- வெற்றி
விழாவும் விடியலில் அரங்கேறும்.

✿ ✿

எதிரி என்று எவரும் இல்லை-என்
எதிரில் நிற்க துணியாதவருக்கு
எதிரி என்பதும் எதிர்ச்சொல்லே.

✿ ✿

உரசி பார்க்க வாருங்கள்
நீங்கள் எவ்வாறு இருப்பினும்
நான் சந்தனமாக மணப்பேன்.
வாருங்கள் எனை உரசிப்பாருங்கள்.

✿ ✿

கர்வம் பிடித்துவிட்டதோ எனக்கு..?
இல்லை இல்லை ஒருப்போதும் இல்லை.
என்று எப்போதும் சொல்லப்போவதில்லை
ஆம் கர்வம் தான்............!
நான் அப்படித்தான்....................!
தீண்டாத வரை நான் பூவின் சந்தோஷம்
தீண்டினால் நான் புயலின் கொடூரம்.


---இரா.சந்தோஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக